4 ஆண்டுகளாக மக்களை கசக்கி பிழிந்த அரசு, தேர்தலை மனதில் வைத்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது-தினகரன்
பட்ஜெட்டில் தமிழகத்திற்கென தனித்துவமான திட்டங்கள் இல்லாதது பெரிய ஏமாற்றம் அளிக்கிறது என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில், வாக்குகளை வாங்க வார்த்தை ஜாலம் நிறைந்த காகிதப்பூ மாலையாக மத்திய அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது .4 ஆண்டுகளாக மக்களை கசக்கி பிழிந்த அரசு, தேர்தலை மனதில் வைத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தனிநபர் வருமானவரி விலக்கு ரூ.5லட்சமாக உயர்த்தி இருப்பது மக்கள் பட்ட காயங்களுக்கு சிறு ஆறுதல் அளிக்கும். பட்ஜெட்டில் தமிழகத்திற்கென தனித்துவமான திட்டங்கள் இல்லாதது பெரிய ஏமாற்றம் அளிக்கிறது என்றும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.