தனியார் மையங்களில் பரிசோதனை கட்டணங்களை அரசே நிர்ணயித்துள்ளது.!

Default Image

தனியார் மையங்களில் பரிசோதனை செய்வதற்கான கட்டணங்களை அரசே நிர்ணயித்துள்ளது.

தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது ஆனால் அந்தவகையில் குமானோர் எண்ணிக்கையும் அதிகரித்து தான் வருகிறது, அதே போல உயிரிழப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது என்பது வருத்தமான செய்தி.

இந்நிலையில் தமிழகத்தில் தற்போது அரசு மற்றும் தனியார் கொரோனா மருத்துவமனைகளில் 54,091 படுக்கைகளும், கொரோனா சிறப்பு மையங்களில் 64,903 படுக்கைகளும், ஆக்சிஜன் வசதிகள் கொண்ட 25,538 படுக்கைகளும், ICU வசதி கொண்ட 3,962 படுக்கைகளும், 2,882 வென்டிலேட்டர்களும் தயார் நிலையில் உள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது தினமும் சுமார் 63,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் தனியார் மையங்களில் பரிசோதனை செய்வதற்கான கட்டணங்களை அரசே நிர்ணயித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்