பாகனை கொன்ற தெய்வானை யானை அஸ்ஸாமிற்கு அனுப்ப முடிவு..!
முருகன் கோவிலில் யானை பாகன் காளிதாசன் என்பவரை கொன்றதால் அஸ்ஸாமிற்கு அனுப்ப தமிழக வனத்துறை முடிவு செய்துள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவில் யானை தெய்வானை கடந்த மே மாதம் இந்த யானையைதனது பாகன் காளிதாசன் என்பவர் குளிப்பாட்டும் போது கோபம் கொண்டு அவரை தும்பிக்கையால் தூக்கி வீசியதும் பாகன் காளிதாசன் கடும் படுகாயம்
இந்த நிலையில் இதனைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 1ம் திருச்சியில் உள்ள எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அந்த யானை அனுப்பிவைக்கப்பட்டது, இந்நிலையில் மேலும் அங்கும் கடந்த 18ம் தேதி அந்த தெய்வானையை குளிப்பாட்டும் போது பாகன் சரண் இளைஞரை தும்பிக்கையால் அந்த யானை தூக்கி எறிந்தது.
இதில் அவர் படுகாயமடைந்தது சரணுக்கு இடுப்பு எலும்பு உடைந்தது அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த யானை தொடர்பாக விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வனத்துறையிடம் ஆண்டனி ரூபின் க்ளமெண்ட் என்பவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலில் இந்த யானை விரைவில் அஸ்ஸாமிற்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது .மேலும் கோவில் நிர்வாகம் இந்த யானையை வைத்துக்கொள்ள தமிழ்நாடு வனத்துறை அனுமதிக்கப்பட்ட கால அவகாசம் கடந்த இந்த யானையை அஸ்ஸாமிற்கே அனுப்ப தமிழ்நாடு வனத்துறை முடிவெடுத்துள்ளது மேலும் ஆர்.டி.ஐ. பதில் மூலம் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.