ஆடுகள் தான் வெட்டப்படுகின்றன…! சிங்கங்கள் அல்ல….! – வைகோ
இந்துத்துவாவினர், இந்தியா மக்களை ஆடுகளாக மாற்ற முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியை அனைவரும் முறியடிக்க வேண்டும் என சபதம் எடுப்போம்.
அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சமத்துவம், சமநீதி கிடைப்பதாற்காக உதித்த விடிவெள்ளி தான் டாக்டர். அம்பேத்கர்.
அம்பேத்கர் அனைத்து துறைகளிலும் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். ஆடுகள் தான் வெட்டப்படுகின்றன. சிங்கங்கள் அல்ல என்பது அம்பேத்கரின் பிரிசித்தி பெற்ற வாசகங்களில் ஒன்று. இன்றைக்கு இந்துத்துவாவினர், இந்தியா மக்களை ஆடுகளாக மாற்ற முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியை அனைவரும் முறியடிக்க வேண்டும் என சபதம் எடுப்போம் என தெரிவித்துள்ளார்.