படிக்கும் அறையை படுக்கை அறையாக மாற்றிய சிறுமி அப்பாவாகிய 17 வயது சிறுவன் போக்ஸோ சட்டத்தில் கைது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட 17 வயதான சிறுவன் கோவையில் உள்ள கோணவாய்க்கால் பாளையம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுவனுக்கும் அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாகி உள்ளது. சிறுவர்களாக இருந்தாலும் இருவரும் காதலித்து வந்துள்ளனர், மாணவியின் பெற்றோர் அந்தப் பெண் பத்தாம் வகுப்பு படிப்பதால் அவள் படிப்பதற்கு என்று தனி அறை ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
நிலையில் ஏற்கனவே காதலித்து வந்த சிறுமி தனது காதலனுடன் இந்த அறைக்குள் அவ்வப்போது பேசுவது வழக்கம். அதுபோல மாணவன் ஒருமுறை இதை சாதகமாக பயன்படுத்தி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணிடம் பாலியல் உறவு வைத்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார் இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் தங்கள் மகளை கண்டித்து காட்பாடியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். இருப்பினும் அந்த சிறுவன் தொடர்ந்து அந்த சிறுமிக்கு செல்போன் மூலமாக தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பதை அறிந்த பெற்றோர்கள் கோவை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து விசாரித்த காவல்துறையினர் அந்த 17 வயது சிறுவனை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.
கடலூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளிக்கையில், 2026 சட்டமன்ற…
சென்னை : தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை இனி பொதுமக்கள் பார்வையிட முடியாதபடி, தேர்தல் விதிகளை…
தெலங்கானா: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன்…
டெல்லி : நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது நீட் (NEET) எனும் பொது நுழைவு தேர்வு…
குஜராத்: ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ், இந்தியா…
சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது என்றும், தேசிய மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால்…