முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், 30 நாள் பரோலில் வீட்டிற்கு வந்துள்ளார். சென்னை புழல் சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்த பேரறிவாளன், துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன், திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை கோவிந்தசாமி தெருவிலுள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். வீட்டிற்கு சென்ற பேரறிவாளனை அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.
பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள 30 நாட்கள் பரோல் காலத்தில் அவர் வெளியே செல்லவும், அறிமுகம் இல்லாத ஆட்களை சந்தித்துப் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டில் இருந்தபடியே அவருக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தேவைப்பட்டால் காவல் துறை அனுமதியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேரறிவாளன் வீட்டின் முன்பாக காவல் ஆய்வாளர் தலைமையில், 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 10 காவலர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பரோல் காலத்தில் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் 30 நாட்கள் தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
மேலும் பேரறிவாளனின் தாயார் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘என் மகனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு 90 நாட்கள் பரோல் கேட்டேன். ஆனால், 30 நாட்கள் மட்டுமே பரோல் வழங்கப்பட்டுள்ளது என்றும், என் கணவர் குயில்தாசன் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தற்போது அவர் கிருஷ்ணகிரியில் உள்ள என் மகள் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். அவரை சந்திக்க பேரறிவாளனுக்கு அனுமதி கிடைக்குமா? என தெரியவில்லை. ஆனால், அதற்காக முயற்சி செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, என் மகன் விடுதலை செய்யப்படுவார் என எனக்கு வாக்குறுதியளித்தார். தமிழக அமைச்சரவையும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், தமிழக ஆளுநர் 2 ஆண்டுகள் கடந்தும் அதற்கான உத்தரவை வழங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது என அற்புதம்மாள் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…