பரோலில் வீட்டுக்கு சென்ற பேரறிவாளன்! குடும்பத்தார் மகிழ்ச்சியுடன் வரவேற்பு!

Default Image

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், 30 நாள் பரோலில் வீட்டிற்கு வந்துள்ளார். சென்னை புழல் சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்த பேரறிவாளன், துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன், திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை கோவிந்தசாமி தெருவிலுள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். வீட்டிற்கு சென்ற பேரறிவாளனை அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள 30 நாட்கள் பரோல் காலத்தில் அவர் வெளியே செல்லவும், அறிமுகம் இல்லாத ஆட்களை சந்தித்துப் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டில் இருந்தபடியே அவருக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தேவைப்பட்டால் காவல் துறை அனுமதியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேரறிவாளன் வீட்டின் முன்பாக காவல் ஆய்வாளர் தலைமையில், 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 10 காவலர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பரோல் காலத்தில் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் 30 நாட்கள் தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.

மேலும் பேரறிவாளனின் தாயார் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘என் மகனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு 90 நாட்கள் பரோல் கேட்டேன். ஆனால், 30 நாட்கள் மட்டுமே பரோல் வழங்கப்பட்டுள்ளது என்றும், என் கணவர் குயில்தாசன் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தற்போது அவர் கிருஷ்ணகிரியில் உள்ள என் மகள் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். அவரை சந்திக்க பேரறிவாளனுக்கு அனுமதி கிடைக்குமா? என தெரியவில்லை. ஆனால், அதற்காக முயற்சி செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, என் மகன் விடுதலை செய்யப்படுவார் என எனக்கு வாக்குறுதியளித்தார். தமிழக அமைச்சரவையும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், தமிழக ஆளுநர் 2 ஆண்டுகள் கடந்தும் அதற்கான உத்தரவை வழங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது என அற்புதம்மாள் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Congress - TMC - BJP
Annamalai (14) (1)
dindigul srinivasan
Devendra Fadnavis - Eknath shinde - Ajit Pawar
JMM - Congress
rain news today