குறைக்கப்பட்ட படத்திட்டத்தின்படியே 10,11,மற்றும் 12-ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடைபெறும் – தேர்வுத்துறை

10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே நடைபெறும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2021-2022-ஆம் கல்வியாண்டிற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படியே, மேல்நிலை (முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு) / இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு, மே 2022- க்கான வினாத்தாட்கள் வழங்கப்படும்.
எனவே, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தினை அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கி, பாடங்களை விரைந்து முடிக்க அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.’ தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சோனியா – ராகுல் காந்தி சந்திப்பு..,”குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வு” – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.!
May 23, 2025
”50வது படத்தில் வித்தியாசமான கெட்டப்.., அது திருநங்கை கெட்டப்” – ரிஸ்க் எடுக்கும் சிம்பு.!!
May 23, 2025