நெல்லை மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய குப்பை சேகரிக்கும் பெண் தொழிலாளி ஒருவர் கீழே யாரோ ஒருவர் தவறவிட்டு இருந்த 58 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் கொண்ட பர்சை காவல்துறையினரிடம் நேர்மையாக ஒப்படைத்துள்ளார்.
தற்போதைய காலகட்டத்தில் எல்லாம் நூறு ரூபாய் பணத்தைக் கூட நாம் தெருவில் தவறவிட்டாலும் பார்த்த உடனே எடுத்துச் செல்லக் கூடியவர்களும், ஏதோ ஒரு இடத்தில் கண் தெரியாமலோ அல்லது உதவியற்ற நிலையிலோ தவிக்கும் முதியவர்களிடம் இருந்து கூட மனசாட்சி இல்லாமல் அவர்களிடம் இருக்கக்கூடிய பணத்தையும் பொருட்களையும் அபகரித்து செல்லக்கூடிய கொள்ளை கும்பல் தான் தற்போது அதிகரித்து காணப்படுகிறது. பணம் படைத்தவர்கள் கூட சில சமயங்களில் பிறரை ஏமாற்றி விடுகிறார்கள். ஆனால், ஏழையாக அன்றாடம் உணவுக்கு தாங்கள் செய்யும் தொழிலையே நம்பி வாழக்கூடியவர்கள் மிக நேர்மையாக இருப்பது பாராட்டக்கூடிய ஒன்றாகத்தான் உள்ளது.
அவ்வாறு நெல்லை மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய குப்பை சேகரிக்கும் பெண் தொழிலாளி மாரியம்மாள் எனும் ஒருவர் யாரோ ஒருவர் தவறவிட்ட பல்லாயிரக் கணக்கான பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போனை உரியவரிடம் ஒப்படைப்பதற்காக காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளார். சேரன்மகாதேவி எனும் பகுதியில் சேகரித்த பழைய பொருட்களை ஒரு பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடையில் கொடுக்க சென்ற பொழுது அந்த குப்பைகளுடன் ஒரு பர்ஸும் இருந்துள்ளது. அதை பிரித்து பார்த்த போது 58 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவை அந்த பஸ்சுக்குள் இருந்துள்ளது.
அந்த பணத்திற்கோஅல்லது விலை உயர்ந்த போனுக்கோ ஆசைப்படாமல் மாரியம்மாள் எனும் அந்தப் பெண்மணி காவல்துறையினரிடம் சென்று அவற்றை ஒப்படைத்துள்ளார். அந்த பஸ்ஸில் ஆதார் அட்டையும் இருந்ததால் உரியவர்களை அழைத்து காவல்துறையினர் மாரியம்மன் தேவியின் கையால் அந்த பர்ஸை வழங்கியுள்ளனர். குப்பை சேகரிக்கும் தொழிலாளியாக இருந்தாலும் தனது வறுமையின் நிமித்தம் அந்த பொருட்களை எடுத்துச் செல்லாமல் நேர்மையாக காவலர்களிடம் பர்ஸை ஒப்படைப்பதற்காக காவல்துறை அதிகாரி குத்துவிளக்கு ஒன்றையும் மாரியம்மாளுக்கு பரிசாக அளித்து கௌரவித்து உள்ளார்.
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…
கோலம் போடுவதில் மறைத்திருக்கும் ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை :நம்முடைய தமிழர்களின் பண்பாடு ஏதேனும் ஒரு…
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) PSLV-C60 பயணத்தில், விண்வெளியில் விதையை முதலில் முளைக்க வைத்து, இலைகளை துளிர்…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 9 வீரர்கள் பலியாகினர். பிஜப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு ரோந்து…