ஐயப்பன் கோவிலில் கஞ்சா செடி..! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்..!

பெரம்பலூர் ஐயப்பன் கோவிலில் தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தின் கரையில் பொதுக்கள் பயன்பாட்டிற்கு நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.தினமும் காலை , மாலை பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த நடைபாதையை அதிக பொதுமக்கள் பயன்படுத்தினாலும் பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் செடிகொடி படர்ந்து காணப்படுகிறது.இந்நிலையில் அங்கு கஞ்சா செடி வளர்ந்து உள்ளது. இது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.இப்பகுதியில் கஞ்சா புகைக்கும் செயல் தான் கஞ்சா செடி வளர காரணம் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
மேலும் குளத்தை நகராட்சி முறையாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தனர்.