அரியலூர் மாவட்டம் கீழமாளிகை எனும் கிராமத்தை சேர்ந்தவர் 23 வயது இளைஞரான சக்திவேல். இந்த இளைஞன் கஞ்சா போதையில் அப்பகுதி கோவிலில் உள்ள பொருட்களை நாசப்படுத்தியுள்ளார்.
சிறுகளத்தூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் புகுந்த சக்திவேல் அங்குள்ள சக்கரம், தேர் கட்ட உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள், கோவிலில் உள்ள சாமி சிலைகள் ஆகியவற்றை தீ வைத்து கொளுத்தியுள்ளார்.
மேலும், அங்குள்ள கேமராக்கள், மற்றும் மின் சாதன பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சக்திவேலை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது சிக்காத அந்த போதை ஆசாமி, சுவர் ஏறி குதித்து பக்கத்தில் இருந்த டாஸ்மாக் கடைக்குள் புகுந்துவிட்டார்.
அங்கும் விடாமல் விரட்டிச் சென்று கிராம மக்கள் அந்த இளைஞரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர், போலீசார் அவரை எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…