ஆட்டம் முடிகிறது; ஆறு மாதத்தில் விடியும் – மு.க.ஸ்டாலின்..!

Default Image

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், மக்களின் வாழ்வாதாரம், GST நிலுவை, தமிழகத்தின் கடன் சுமை, முதலீட்டாளர் மாநாடு, டெல்டாவில் எண்ணெய் குழாய் பதிப்பு-என திமுக கோரிய எதையும் விவாதிக்காமல் neet-ஐ தமிழகத்துக்குள் நுழைத்த தமிழக முதல்வர் பேரவையில் அட்டைக் கத்தி சுழற்றுகிறார். என தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று நாள்கள் மட்டுமே கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக கோரிய ஆரோக்கியமான விவாதங்கள் நடந்தனவா..? ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரம்; முதலீட்டாளர் மாநாடுகள்- முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்கள் ஈர்த்தம் முதலீடு எவ்வளவு..? உருவான வேலைவாய்ப்புகள் குறித்து விவாதிக்கவில்லை.

“ஜல்ஜீவன் மிஷன்” திட்ட முறைகேடுகள், ஊராட்சி மன்றங்களுக்கு நேரடியாக நிதி ஒதுக்காதது, மத்திய அரசு மாநிலங்களுக்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி பாக்கி, மாநில அரசின் கடன் சுமை 4.56 லட்சம் கோடி எதையும் விவாதிக்கவில்லை. பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்காமல் வெளிநடப்பு செய்தது, டெல்லி எஜமானர்களின் உத்தரவின்படி கையெழுத்து இட்டதாலும், தமிழ்நாட்டில் நீட் தேர்வை நுழைத்தது பழனிச்சாமி அரசு ஆனால் இவற்றை மறைத்து சட்டப்பேரவையில் ஆவேசம் காட்டுகிறார் முதலமைச்சர்.

டெல்டா பகுதிகளில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் தொடர்கின்றன. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணெய் கிணறுகள் அமைக்க 2013 ஆம் ஆண்டு வரை மத்திய அரசு கால அவகாசம் வழங்கியிருக்கிறது. விவசாயி வேடம் போடும் முதல்வர் வாய்திறக்கவில்லை.

அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்தம் வேளாண் உற்பத்தி, ஊக்குவிப்பு சட்டம், வேளாண் சேவைகள் திருத்த சட்டம் ஆகியன விவசாயிகளின் வாழ்வுக்கு எதிரானது என போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாடாளுமன்றத்தில் பாராட்டி ஆதரிக்கிறது பழனிச்சாமி அரசு, முதுநிலை (சீனியாரிட்டி) அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்காதது, அவர்களின் கோரிக்கை குறித்து விவாதிக்கவில்லை.

ஆவேசக் குரல் எழுப்பி, அட்டைக் கத்தி சுழற்றும்  நாடகம் அதிக காலம் நீடிக்காது. ஆட்டம் முடியும்.. ஆறு மாதத்தில் விடியும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army