மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா இறுதி ஊர்வலம் தொடக்கம்.!
மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி கங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் இறுதி ஊர்வலம் தொடங்கி உள்ளது.
நேற்று ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவர் இவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் நேரில் வந்தும், இரங்கல் அறிக்கைகள் மூலமும் தங்கள் வருத்தத்தை பதிவு செய்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் தனது அஞ்சலியை செலுத்தினார்.
தற்போது திருமகன் ஈவெராவின் இறுதி அஞ்சலி தொடங்கியுள்ளது. அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. இந்த இறுதி ஊர்வலத்தில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.