ஆற்றங்கரையில் நடந்த உல்லாசம்!பின்னர் நடந்த விபரீதம்!

Published by
Sulai
  • ஆற்றங்கரைக்கு திருமணம் செய்து கொள்வதாக வரவழைத்து உல்லாசம் அனுபவித்து கழுத்தை அறுத்து கொலை செய்த ஜோதிடர்.
  • பின்னர் காவல்துறையினரிடம் தாமாகவே முன்வந்து சரணடைந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே ஆண்டிவலசை பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையம்மாள் ஆவார்.இவர் அப்பகுதியில் ஜோதிடராக பணிபுரியும் கந்தசாமியின் மகள் ஆவார்.

இந்நிலையில் வெள்ளையம்மாளுக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த நபருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.பின்னர் திருமணமான மூன்று மாதங்களில் கணவருக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்துள்ளனர்.

இதன் காரணமாக வெள்ளையம்மாள் தனது தந்தையான ஜோதிடர் கந்தசாமி வீட்டில் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் அப்பகுதியில் உள்ள முத்து என்ற ஜோதிடருக்கும் வெள்ளையம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.இந்நிலையில் ஜோதிடர் முத்து வெள்ளையம்மாளிடம் அடிக்கடி பணம் பெற்று சந்தோசமாக செலவழித்து வந்துள்ளார்.

இதனால் ஒருகட்டத்தில் உஷாரான வெள்ளையம்மாள் விரைவில் தம்மை திருமணம் செய்துகொள்ளுமாறு முத்துவிடம் வற்புறுத்தி வந்துள்ளார்.ஆனால் முத்து தமக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் அறவே இல்லை என்று கூறி தப்பி வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில் கடந்த 11-ம் தேதி வெள்ளையம்மாளை தொலைபேசியில் அழைத்த முத்து திருச்சி மாவட்டத்தில் உள்ள தொடையூருக்கு வந்தால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

முத்துவின் பேச்சை நம்பி திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் வந்த வெள்ளையம்மாளை முத்து ஆற்றங்கரைக்கு அழைத்து சென்று தனது ஆசை தீரும் வரை உல்லாசம் அனுபவித்துள்ளார்.

பின்னர் அப்பகுதியில் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.பின்னர் வெள்ளையம்மாளின் உடலை ஆற்றங்கரை ஓரத்திலேயே புதைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் தனது மகளை காணவில்லை என்று ஜோதிடர் கந்தசாமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் வெள்ளையம்மாளை தாம் கொலை செய்து விட்டதாக காவல்துறையினரிடம் முத்து சரணடைந்துள்ளார்.இந்நிலையில் முத்துவை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

18 minutes ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

58 minutes ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

1 hour ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

10 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

12 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

13 hours ago