815 பக்கங்கள் கொண்ட முழு தீர்ப்பை பிற்பகல் இணையதளத்தில் பதிவேற்றம் – உயர்நீதிமன்றம்
815 பக்கங்கள் கொண்ட முழு தீர்ப்பை பிற்பகல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்த தமிழக அரசின் உத்தரவு தொடரும் எனவும் கூறியுள்ளது. உயர்நீதிமன்ற நிதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு 815 பக்க தீர்ப்பை வழங்கினர்.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசின் நடவடிக்கை செல்லும் என்பது உறுதியாகி உள்ளது. தீர்ப்பின் முழு விவரம் மதியம் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.