அடுத்த 2 நாட்களுக்கு மலை சார்ந்த பகுதிகளில் உறைபனி தொடரும் : வானிலை ஆய்வு மையம்
மலை சார்ந்த பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு உறைபனி தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி, கோவை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் உள்ள மலை சார்ந்த பகுதிகளில் உறைபனி தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.