நாகை மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் வனிதா. இவர் நாகை புதிய பேருந்து நிலையம் எதிரே கமலம் தொண்டுநிறுவனம் என்று என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார்.இன்னிநிலையில் வனிதா கடந்த சில தினங்களுக்கு முன் புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று புயல் பாதித்த மக்களிடம் மத்திய அரசு 50 ஆயிரம் கடன் வழங்குவதாகவும் அதில் 25 ஆயிரம் மானியம்மாதம் ஆயிரத்து 500 வீதம் செலுத்த வேண்டுமென்று கூறி பிரச்சாரம் செய்துள்ளார். இதற்கான விண்ணப்ப கட்டணம் 150 ரூபாய் எடுத்துக் கொண்டு ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை குடும்ப அட்டை ஆகியவற்றை ஆகியவற்றுடன் தமது அலுவலகத்தில் வருமாறும் கூறியுள்ளார்.
இந்நிலையில் வனிதா கூறியதை நம்பி கடந்த மூன்று தினங்களாக ஏராளமான பெண்கள் வனிதாவின் அலுவலகத்துக்கு வந்தனர்.150 ரூபாய்_யை செலுத்தி விண்ணப்பங்கள் பெற்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் வனிதா முன்னுக்குப்பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வனிதா உட்பட 4 பேரை மகளிர் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை விசாரித்து வந்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில் தன் மீது உள்ள குற்றச்சாட்டை மறுத்த வனிதா கடன் வாங்கி தருவதாக கூறியது உண்மை.தாம் யாரிடமும் விண்ணப்பக் கட்டணம் வாங்கவில்லை என்றும் கூறி வருகின்றார்.