காடு என்பது வனவிலங்குகளுக்கு தான்; மனிதர்களுக்கு அல்ல..! உயர்நீதிமன்றம் கருத்து ..!
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்கு மட்டுமே மனிதர்களே அல்ல என உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து.
கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் உள்ள சுயம்பு ஆண்டவர் கோவிலில் டிசம்பர் 10 முதல் 12 வரை மகாதீபம் ஏற்ற சரவணன் என்பவர் அனுமதி கோரி மனு ஓன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் 2015 -ம் ஆண்டு முதல் வெள்ளையங்கிரி மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்ட நிலையில் தற்போது அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என கூறி இருந்தார். இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் , சேஷசாய் முன் அமர்விற்கு வந்தது.
இதை தொடர்ந்து நீதிபதி சத்தியநாராயணன் வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்கு மட்டுமே மனிதர்களே அல்ல என கருத்து தெரிவித்தார்.மேலும் இதுகுறித்து தமிழக அரசு , வனத்துறை ,அறநிலைத்துறை மற்றும் கோவை ஆட்சியர் ஆகியோர் நவம்பர் 3-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவுவிட்டார்.