மகா சிவராத்திரி.! சதுரகிரி பக்தர்கர்களுக்கு வனத்துறை கடும் கட்டுப்பாடு.! அதற்கு அனுமதி இல்லை…
மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அங்கு இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை என வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகா சிவராத்திரி நிகழ்வானது நாளை இரவு கோலாகமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாடுமுழுவதும் எண்ணற்ற சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், பக்தர்கள் வருகைக்கான ஏற்பாடு என தீவிரமடைந்து வருகிறது.
சதுரகிரி சிவன் கோவில் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்க சிவன் கோவிலுக்கும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவதுண்டு. வழக்கமாக அங்கு அமாவாசை, பவுர்ணமி போன்ற சிறப்பு தினங்களுக்கு மட்டுமே அந்த மலையேற அனுமதி வழங்கப்படும். அப்போது சிறப்பு பேருந்துகளும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும். அதே போல சிவ ராத்திரிக்கும் பக்தர்கள் வருகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனுமதி மறுப்பு : ஆனால், இந்த முறை வனத்துறை கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன் படி, அங்கு நாளை இரவு மஹா சிவராத்திரி அன்று தங்க கூடாது எனவும் , மாலை 6 மணிக்குள் மலையில் இருந்து கிழே இறங்கி விட வேண்டும் எனவும் வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மகா சிவராத்திரி என்பதால் இரவு அங்குள்ள சிவாலயத்தில் தங்கி வழிபடலாம் என நினைத்து இருந்த பக்தர்களுக்கு வனத்துறையின் இந்த உத்தரவு சற்று ஏமாற்றமாகவே இருந்துள்ளது.
நாளை முதல் பிப்ரவரி 21ஆம் தேதி வரையில் 4 நாட்களுக்கு சதுரகிரி மலை ஏறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.