ரேஷன் பொருள்கள் கிடைக்கிறதா? கடைகளுக்கு பறந்த உத்தரவு.. உணவுத்துறை எச்சரிக்கை.!
சென்னை : கள்ளச்சந்தையில் ரேஷன் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆம், ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், சில ரேஷன் கடை ஊழியர்கள், ரேஷன் பொருள்களை கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மே மாதம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, தேர்தல் முடிவுக்கு பிறகு, ரேஷன் பொருள்கள் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், தற்போது வரை முறையாக பொருள்கள் கிடைக்கவில்லை என்றும் அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கள்ளச்சந்தையில் ரேஷன் பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழக அரசு எச்சரிக்கை உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், 80 வயதிற்கு மேற்பட்டவர்களை ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்து பொருட்களை பெற வேண்டும் என வற்புறுத்தக்கூடாது. இதனை மீறும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, இது குறித்து பொதுமக்கள் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என உணவுத்துற தெரிவித்துள்ளது.
புகார் எண்
ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக 1800-599-5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.