பின்பாட்டு வாசிக்கிறார் ‘வெற்று நடை’ பழனிசாமி! பெட்ரோல் – டீசல்- எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்…! – மு.க.ஸ்டாலின்

Default Image

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிற நிலையில், சிலிண்டர் விலையும் அதிகரித்து வருகிறது.  இதனையடுத்து இது குறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

  • மத்தியிலும் மாநிலத்திலும் நடப்பது மக்களை வாட்டி வதைக்கிற ஆட்சி தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை ஒரு பத சோறு.
  • ஏறத்தாழ 400 ரூபாய் அளவில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை இருந்தபோது  காலி சிலிண்டர்களை தூக்கிக் கொண்டு போராடிய பாஜக ஆட்சியில்,சிலிண்டர் விலை ரூ.787.50
  • திமுக ஆட்சியில் பெட்ரோல் விலை ரூ 63.37, டீசல் விலை ரூ 43.95 அதற்கு கூப்பாடு போட்ட அதிமுக ஆட்சியில், ஒரு லிட்டர் பெட்ரோல்  91.19, டீசல் விலை  84.44.
  • மத்திய அரசு கலால் வரி விதித்தால், அதிமுக அரசு பெட்ரோலுக்கு ரூ 3.22 டீசலுக்கு ரூ 2.50 வாட் வரி விதித்தது. எஜமான செய்வதையே அடிமைகளும் செய்கிறார்கள்.
  • இது தான் ‘அச்சே தின்’ என்கின்ற மோடி அரசின் நல்ல நாளா? அரசு பணத்தை அள்ளி இறைத்து வெற்று விளம்பரம் கொடுக்கும் அதிமுக அரசின் சாதனையா?
  • பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வுக்கு எதிராக பிப்ரவரி 22ஆம் தேதி  திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
  • சிலிண்டர் விலை உயர்வால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மகளிர், டீசல் விளையாமல் பாதிக்கப்பட்டுள்ள சரக்கு வாகன போக்குவரத்து துறையினர், பெட்ரோல் விலை உயர்வால் அல்லல்படும் இருசக்கர வாகன பயனாளர்கள், முடங்கியுள்ள வணிகர்கள், நுகர்வோர் என அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து எழுச்சிமிக்க போராட்டமாக வடிவெடுக்கும்.

என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்