மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது.! மீனவர்களின் கோரிக்கை முடங்கியதா.?

Default Image

தமிழகத்தில் கடந்த காலங்களில் 45 நாட்களாக இருந்த மீன்பிடித் தடைக்காலம், 61 நாட்கள் என அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், மீனவர்களின் கோரிக்கையும் அதிகரித்திருக்கின்றன.

சென்னை முதல் குமரி கடற்பகுதி வரை, அமல்படுத்தப்பட்டிருக்கும்  மீன்பிடி தடைக்காலம் மீன்களின் இனவிருத்திக்கு ஏற்ற காலமாக ஆய்வின் மூலம் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்த 61 நாட்களிலும், வலைகளை உலர்த்துவது, படகுகளை சீரமைப்பது என தங்களை அடுத்த பயணத்திற்கு தயார்செய்துகொள்ள பயன்படுத்திக்கொள்ளும் மீனவர்களின் கோரிக்கைகளெல்லாம், தடைகாலத்தில் அரசின் சார்பில் தங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகையை அதிகரித்து உரியகாலத்தில் வழங்க வேண்டும் என்பதுதான்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் மட்டும் 10 ஆயிரம் மீனவர்கள், 60 ஆயிரம் சார்பு தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். லட்சக்கணக்கில் செலவு செய்து படகை சீரமைத்தாலும், மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடலுக்கு செல்லும் போது இலங்கை கடற்படையினர் தங்கள் படகுகளை சீரழிக்குமோ என மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கடலுக்கு செல்லும்போதும் சுமுகநிலையை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்