மீன்வள மசோதா மீனவர்களின் கருத்தை கேட்டறிந்த பின்பே நிறைவேற்றப்படும் – எல்.முருகன்!
மீன்வள மசோதா மீனவர்களின் கருத்தை கேட்டறிந்த பின்பே நிறைவேற்றப்படும் என எல்.முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், மீனவர்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே மீன்வள மசோதா நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மசோதா குறித்து பல பொய் பிரச்சாரங்கள் பரப்பப் பட்டு வருவதாகவும், மசோதாவின் சரத்துக்களை மக்களிடம் முறையாக எடுத்துரைப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.