கோவையில் கொரோனாவால் உயிரிழந்த முதல் இளைஞர்..அதிர்ச்சி சம்பவம்.!
கோவையில் கொரோனா தொற்றினால் முதல் இளைஞர் உயிரிழந்த சம்பவம் கோவையில் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் சின்னியம்பாளையத்தை சேர்ந்த 28 வயது இளைஞர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வரும் இவர் இந்த பொது முடக்கத்தால் வீட்டில் இருந்தே பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு சில நாட்களாக காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்ததால் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அங்கு சிகிச்சை பயன் இல்லாததால் இவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனையில் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது ஆனால் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு இளைஞர் உயிரிழந்தார். கோவையில் இதுவரை கொரோனாவுக்கு முதியவர்கள் மட்டுமே பலியாகி உள்ள நிலையில் முதல் இளைஞர் உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.