இன்று காலை முதல் ரயில் சேவை வழக்கம்போல் இருக்கும்…!
ரயில் சேவை இன்று காலை முதல் வழக்கம்போல் இருக்கும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே நிர்வாக பொதுமேலாளர் குல்ஷேஸ்த்ரா கூறுகையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டிருந்த ரயில் சேவை இன்று காலை முதல் வழக்கம்போல் இருக்கும் கஜா புயலால் 9 விரைவு ரயில்கள், 14 பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டிருந்தது.குறிப்பாக திருச்சி, மதுரை ரயில் கோட்டங்கள் கஜா புயலால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது என்று ரயில்வே நிர்வாக பொதுமேலாளர் குல்ஷேஸ்த்ரா தெரிவித்துள்ளார்.