முதல் தீவிரவாதி ஒரு இந்து ! கமல் பேசியதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Default Image

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல் பேசியதற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் நடைபெற்ற சமயத்தில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே’ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர்  கமல்ஹாசன் குறிப்பிட்டார். இதற்கு  கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.மேலும் கமல்ஹாசன் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.

மேலும் இந்து சேனா அமைப்பு சார்பாக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கமல் பேசியதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது.பின்னர் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து இன்று விசாரித்த டெல்லி பட்டியாலா நீதிமன்றம்,வழக்கை அக்டோபர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்