சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முதன் முதலாக கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்ப்பட்டது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முதன் முதலாக கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்ப்பட்டது. அது குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறுகையில், சென்னை ராஜீவ்காந்தி, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனை ஆகிய முக்கிய மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் படி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 4 கோடி செலவில் கல்லீரல் மாற்று அறுவை அரங்கு தயார் செய்யப்பட்டது. இதற்கான உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கல்லீரல் அறுவை சிகிச்சையை துல்லியமாக செய்யக்கூடிய கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டு அதிநவீன கருவிகள் இங்குசெயல்பாட்டில் உள்ளன.
அதன்பிறகு, தற்போது முதன் முறையாக ஈரோட்டை சேர்ந்த மணி என்ற 52வயது ஆண் ஒருவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கல்லீரல் துறை உருவாக்கி 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்த வெற்றிகரமான ஆண்டில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 17 நாட்கள் ஆகிவிட்டன. அவர் நலமுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும், அதற்கு உறுதுணையாக மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாற்றியதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆந்திரப் பிரதேசம்: திருமலை லட்டு கவுண்டர்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் சம்பவ இடத்திற்கு…
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…
திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…
சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக…
சென்னை: பொங்கல் பரிசாக பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு…