மின் வாரியத்தில் உதவி பொறியாளர், தொழில்நுட்ப பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப ஜனவரி முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமரபாளையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மின் வாரியத்தில் உதவி பொறியாளர், தொழில்நுட்ப பணியாளர், ஆகிய பணியிடங்களை நிரப்ப ஜனவரி மாதம் முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்தவுடன் 10,000 பணியிடங்கள் நிரப்படும் என்றும் கூறியுள்ளார். இதனிடையே, மின் வாரியத்தில் உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…