நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி திருவான்மியூர் வாக்குச்சாவடியில் முதல் நபர்களாக வாக்களித்துவிட்டு சென்றுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 3,08,38,473 ஆண் வாக்காளர்களும், 3,18,28,727 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6,26,67,200 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு தங்களது வாக்கினை செலுத்த 20 நிமிடங்கள் முன்னதாகவே வந்தனர்.அவர் தான் வரிசையில் நின்று செலுத்த விரும்புவதாக கூறினார்.ஆனால் காவல்துறையோ வரிசையில் நின்றால் அவரை காண அவரது ரசிகர்கள் கூடி விடுவார்கள் என்பதற்காக அவரை முன்னதாக உள்ளே அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் தனது வாக்கினை செலுத்தி விட்டு வெளியே வந்த நடிகர் அஜித் தனது வாக்கு செலுத்தியதற்கான அடையாள மையை உயர்த்திக் காட்டிவிட்டு நன்றி தெரிவித்து விட்டுச் சென்றார்.
அவரை காண ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு செல்பி எடுத்தனர் ஆனால் அஜித்தோ செல்பி எதுவும் எடுக்க வேண்டாம் காவல்துறைக்கு அலுவலர்களுக்கும் இடைஞ்சல் கொடுக்க வேண்டாம் என்று கூறி தனது ரசிகர்களுக்கு வழக்கம் போல அன்பு அறிவுரை கூறினார்.
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…