நடிகர் சிவாஜி கணேசன் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர்…!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,எ அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
நடிகர் சிவாஜி கணேசனின் வெண்கல சிலை சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளது. சிவாஜி சிலையை மக்கள் பார்வைக்கு படும்படி வெளியே அமைக்குமாறு கோரிக்கை வைத்த நிலையில், வெளியே அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.