தமிழகத்தில் முதல் மினி டைடல் பூங்கா! ரூ.1,264 கோடி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
தமிழகத்தில் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.1,264 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் முக ஸ்டாலின். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திட்ட பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வின்போது துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
அதன்படி, பல்வேறு துறைகளில் ரூ.502 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதல்வர், ரூ.732 கோடி மதிப்பில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதேசமயம் ரூ.204.57 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 1,374 புதிய வகுப்பறை கட்டடங்களையும் முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
பஞ்சுமிட்டாய் விற்க தடை – தமிழக அரசு
ரூ.15.34 கோடியில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான குடியிருப்புகள், மாவட்ட அலுவலர் அலுவலகங்கள் உள்ளிட்ட புதிய கட்டடங்கள் திறக்கப்பட்டது. திருச்சி நவல்பட்டியில் ரூ.59.57 கோடியில் தகவல் தொழில்நுட்பவியல் கட்டடம், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ரூ.29.93 கோடி செலவில் காசநோய், தொற்று நோய் பிரிவு கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.
இதுபோன்று ஊரக வளர்ச்சி, பள்ளிக்கல்வி, தகவல் தொழில்நுட்பவியல் உள்ளிட்ட துறைகளில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் பயன்பாட்டிற்காக ரூ.30 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. எனவே, இதில் குறிப்பாக தமிழ்நாட்டில் முதல் மினி டைடல் பூங்காவை முதலவர் ஸ்டாலின் திறந்து வைத்தார். டைடல் நியோ லிமிடெட் மூலமாக விழுப்புரம் திருச்சிசிற்றம்பலத்தில் ரூ.31 கோடி செலவில் 500 பேர் பணியாற்றும் வகையில் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.