ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் மதுபான கடை பார்கள் திறப்பு!
கொரோனா ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபான கடைகள் உடன் இணைந்து உள்ள பார்களை இன்று முதல் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருட காலங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவி கொண்டே செல்கிறது. தற்போது இந்தியாவில் தனது வீரியத்தை கொரோனா வைரஸ் குறைத்துள்ளது என்றே கூறலாம். இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது வரை அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. ஆனால் மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசாங்கம் சில தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது.
இந்நிலையில் மார்ச் மாதம் ஊரடங்கு அறிவித்த போதே டாஸ்மார்க் கடைகளும் மூடப்பட்டு அதன் பின் தளர்வுகளில் ஒன்றாக அதுவும் திறக்கப்பட்டது. ஆனால் டாஸ்மார்க்களுடன் இணைந்து உள்ள பார்கள் மூடப்பட்டிருந்த நிலையில் இருந்தது. ஒன்பது மாதங்களுக்குப் பிறகு தற்போது தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை திறக்கலாம் என அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சில நிநிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.