ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ! ஆளுநர் உரையுடன் தொடக்கம்
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன், சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்க உள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனிடையே தான் தேர்தலுக்கு முன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை இன்று காலை 11.00 மணிக்கு கலைவாணர் அரங்கில் , மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டாங்கத்தில் கூட்ட இருக்கிறார்.ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்க உள்ளது.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரைமுடிந்த பின் சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.