தமிழகத்தில் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது! யாருக்கு தெரியுமா?
தமிழகத்தில், கொரோனா தடுப்பூசி 166 மையங்களில் வழங்கப்பட்டு வரும் நிலையில், முதல் தடுப்பூசி தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் மருத்துவர் செந்தில் அவர்களுக்கு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி வழங்கும் பணிகளை முதல்வர் பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.கொரோனா தடுப்பூசி 166 மையங்களில் வழங்கப்பட்டு வரும் நிலையில், முதல் தடுப்பூசி தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் மருத்துவர் செந்தில் அவர்களுக்கு போடப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு ஒரு மையத்தில் 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் 8000 முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இநநிலையில் முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் 6 லட்சம் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது குறிப்பிடதக்கது.