#BREAKING: 127 கோடி மதிப்பிலான கொரோனா சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்த முதல்வர்.!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா சிகிக்சைக்காக சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் 127 கோடி மதிப்பிலான 750 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையம் உருவாக்கப்பட்டது. இந்த சிறப்பு மருத்துவமனையை முதல்வர் திறந்து வைத்தார்.
இந்த மருத்துவமனை முழுக்க முழுக்க நவீன கருவிக்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 60 ICU-க்கள் உள்ளது. மேலும், நடமாடும் CT scan போன்றவை உள்ளது.
இன்று காலை அரியலூர் மாவட்டத்தில் புதியதாக கட்ட உள்ள 10.83 ஹெக்டர் நிலப்பரப்பில் ரூ.347 கோடியில் செலவில் உருவாக்கவுள்ள மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.