#Breaking:நீட் தேர்வின் தாக்கம் குறித்து நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையிலான குழு ஆலோசனை…!

- தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து,ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையிலான குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.அந்த வகையில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த மாதம் பொறுப்பேற்றார்.
அதன்படி,நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் தமிழக அரசு குழுவை அமைத்துள்ளது.
இந்நிலையில்,சென்னை மருத்துவக் கல்வி இயக்குனகரத்தில்,ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில்,நீட் தேர்வு தொடர்பாக முதல் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது.
இக்கூட்டத்தில்,நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025