திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

Default Image

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது .

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே பரபரப்பாகியுள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.

இதனிடையே 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க, குழு அமைத்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் அ.ராமசாமி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கை குழுவில் இடம்பெற்றனர்.

இந்நிலையில் இன்று   திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியுள்ளது .தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டம் தொடங்கியுள்ளது.இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,கனிமொழி ,திருச்சி சிவா,ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் உட்பட குழுவில் இடம்பெற்று உள்ளவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்