சென்னை : இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். மேலும் படத்திற்கான பணிகளை அவர் செய்து கொண்டிருந்தாலும், ஒரு பக்கம் கட்சிக்கான வேலைகளிலும் அவர் தீவிரம் காட்டிக் கொண்டு வருகிறார்.
அதன்படி கட்சியின் உறுப்பினர்களை சேர்ப்பது, கட்சி நிர்வாகிகளை நியமிப்பது, விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை தொடர்ந்து சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்குவது, பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குவது என பல சமூக பணிகளில் விஜய் தீவிரம் காட்டி கொண்டே வருகிறார்.
இந்நிலையில், அக்கட்சியின் முதல் மாநாடு எப்போது நடைபெறும் என்ற எதிர்ப்பார்ப்பு தமிழகம் முழுவதும் உள்ள அவரது கட்சி உறுப்பினர்கள், விஜய் ரசிகர்கள் என அனைவருக்கும் இருந்து வருகிறது. சமீபத்தில் முதல் மாநாடு திருச்சியில் நடைபெறும் என்ற தகவல் ஒன்று வெளியாகி இருந்தது. ஆனால், அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை விஜய் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், அக்கட்சியின் முதல் மாநாட்டிற்கான தேதி இதுதான் எனும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அந்த தகவல் என்னவென்றால் வரும் செப்டம்பர்-25 ம் தேதி திருச்சியில் உள்ள பொன்மலை ஜி-கார்னர் திடலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், அந்த மாநாட்டிற்கு அனுமதி கோரி மேலாளிடம் நிர்வாகிகள் கடிதம் வழங்கியுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தவெக கட்சி தரப்பில் இருந்து வெளியாகவில்லை. மேலும், விஜய் தற்போது அவரது 68-வது படமான வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோட்’ படத்தில் நடித்து வருகிறார், இப்படத்திற்க்கான அப்டேட், பாடல்கள் என வெளியாகி கொண்டே இருக்கிறது. இதனால், வரும் செப்-5ம் தேதி அன்று கோட் படம் வெளியான பிறகு, இந்த மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக…
ஒட்டாவோ : கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வேதனையுடன் அறிவித்துள்ளார்.…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்…
இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில், ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்பட்டது. ஆனால்,…
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…