தமிழகத்தில் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் கல்லூரி திறப்பு – யாருக்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி திறக்கப்படும் என அறிவிப்பு.
கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் விருப்பத்திற்கிணங்க பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு கொரோனா தொற்றின் சூழ்நிலைக்கேற்ப பின்பு தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் டிசம்பர் இரண்டாம் தேதி முதல் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கான கல்லூரிகள் மட்டும் திறக்கப்படும் என தற்பொழுது அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருகின்ற டிசம்பர் 2ஆம் தேதி முதல் முதுநிலை இறுதி ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பயிலக்கூடிய மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிற கல்லூரி மாணவர்களுக்கு எப்பொழுது கல்லூரிகள் துவங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025