நாட்டிலேயே முதலாவது மையம்.! ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி தமிழகம்.! முதல்வர் பெருமிதம்.!

Default Image

தொழில் வளர்ச்சியில் தமிழகம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.

சென்னை தரமணியில் உள்ள டைடல் பூங்காவில் தொழில் வளர்ச்சி 4.0 மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையடுத்து, தொழில் வளர்ச்சி 4.0 மாநாட்டில் தமிழக விண்வெளி, பாதுகாப்பு கொள்கையை வெளியிட்ட பின் உரையாற்றிய முதலமைச்சர் முக ஸ்டாலின், தொழித்துறையில் தமிழகம் வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது. தொழில் வளர்ச்சியில் தமிழகம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டின் தொழித்துரைக்கு மிகப்பெரிய இலக்கை வைத்துள்ளோம். 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும்.

இந்த இலக்கை அடைய தமிழக தொழித்துறை தொய்வில்லாமல் பணியாற்றி வருகிறது. இதனால் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி தமிழகம் முன்னேறி வருகிறது. மெய்நிகர் விமானி பயிற்சி நிறுவனம் மூலம் மாதம் 200 மாணவர்கள் என்ற அடிப்படையில் பயிற்சியளிக்கப்படும். கிராமப்புற இளைஞர்கள் ஆளில்லா விமான விமானிகளாக உலகை வலம்வர இயலும். 15 மாத காலமாக தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னோக்கிய பாய்ச்சலில் செல்கிறது.

நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சியை இலக்கு வைத்து அரசு செயல்பட்டு வருகிறது. உயர்கல்வியிலும், தொழில்துறையிலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. நாட்டிலேயே முதல் திறன்மிகு மையம், தரமணியில் திறக்கப்பட்டுள்ளது. திறன்மிகு மையங்கள் மூலம் சிறு, குறு தொழில்கள் வளர்ச்சி காண முடியும். டிட்கோ – சீமன்ஸ் இணைந்து அமைத்துள்ள திறன்மிகு மையம் நாட்டிலேயே முதலாவது மையம்.

திறன்மிகு மையங்களை தொழித்துறையினர் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். திறன்மிகு மையங்கள் மூலம் தமிழகம் அதிகளவில் முதலீடுகளை ஈர்க்க இயலும். ரூ.75,000 கோடி முதலீட்டை ஈர்த்து ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், கிராமப்புற இளைஞர்கள் ஆளில்லா விமான பைலட்டுகளாக பணி வாய்ப்பு பெறலாம் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்