தமிழகத்தின் நிதி நிலைமை ஐ.சி.யூ.விற்கு எடுத்துப்போகும் அளவுக்கு மோசமாகிவிட்டது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றசாட்டியுள்ளார்.
முதல்வரின் தவறான நிதி மேலாண்மையால் ரூ.4.56 லட்சம் கோடி கடன், ரூ.25,000 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் கடன் சுமையை ஏற்றி வைத்து வேடிக்கை காட்டுகிறது அரசு. கொரோனா காலத்தில் போடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வரை முதலீடுகள் வரவில்லை. நிதி நிலையை மறுவரையரை செய்ய ஆக்கப்பூர்வ ஆலோசனை வழங்கியும் அரசு சிந்தித்து பார்க்கவில்லை.
ஆர்.பி.ஐ முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் குழு அமைத்து இதுவரை அரசு அறிக்கை பெறவில்லை. வருவாய், நிதி பற்றாக்குறை இரண்டும் அதிமுக ஆட்சியின் இணை பிரியாத கை குழந்தைகளாக பயணிக்கிறது. எஞ்சியுள்ள 6 மாதங்களில் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடியுமா என முதல்வர் ஆராய வேண்டும். மேலும், கொரோனா சூழலில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மீளாத்துயரில் மூழ்கியுள்ள மக்களின் வாழ்வில் குறைந்தபட்ச ஒளியையாவது ஏற்றிட அரசு முன் வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…