இன்றும் போராட்டம் தொடரும்!! ஜாக்டோ-ஜியோ

Published by
Venu
  • ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசாணை
  • தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.7500ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை
  • இன்று  பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் இடத்தில் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்
  • இன்றும்  போராட்டம் தொடரும்

இன்றும் போராட்டம் தொடரும் என்று  ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டம்: 
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

ஜனவரி 22-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்:

Image result for ஜாக்டோ

எனவே இதை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஜனவரி 22-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தது.ஜனவரி 22-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றது.நான்கு நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.

ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசாணை :

பள்ளி கல்வித்துறை அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.அதில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு விதி 17B-யின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்தது.

அதேபோல் ரூ.7500 ரூபாய் ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.7500ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை:

இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.7500ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை.தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் 28ஆம் தேதி பணியில் சேரவும் உத்தரவு பிறப்பித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.தலைமைச்செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இன்று  பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் இடத்தில் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்றுக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். நாளை பணிக்கு திரும்பினால் அதே பள்ளியில் தொடர்ந்து பணியாற்றலாம்.இன்று பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் இடத்தில் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். 28ம் தேதிக்கு பின்னர் பணிக்குவருபவர்கள் அதே பள்ளியில் பணியாற்ற இயலாது . காலியாக இருக்கும் இடத்தில்தான் அவர்கள் பணியில் சேர வேண்டியது இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

போராட்டம் தொடரும்:

இந்நிலையில் இன்றும் போராட்டம் தொடரும் என்று  ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

தாக்கத்தை ஏற்படுத்திய விடுதலை 2! முதல் நாள் வசூல் எவ்வளவு?

சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த…

18 minutes ago

“துணைவேந்தர் நியமன விவகாரத்தில் அரசியல் செய்வதை விடுங்கள்”..ஆளுநருக்கு அமைச்சர் கோவி.செழியன் பதில்!

சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை…

39 minutes ago

மின்சாரம் திருடிய சமாஜ்வாதி எம்பி! ரூ.1.91 கோடி அபராதம் விதித்த அதிகாரிகள்!

டெல்லி : சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான், மின்சார திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு உத்தரபிரதேச பவர்…

58 minutes ago

வங்ககடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா?

சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…

1 hour ago

வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

10 hours ago

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது!

கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…

12 hours ago