மதுக்கடைக்கு எதிரான போராட்டம்.! ஆதரவு தெரிவித்த நபரை செருப்பை கொண்டு அடிக்க முயன்ற பெண்.!
- புதுக்கோட்டையில் மதுக்கடையினால் ஏராளமான தொந்தரவுகளை அனுபவித்து வந்த பொது மக்கள், மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின் போது அடித்து உடைத்தனர்.
- மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தகவல் வந்ததும், சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டம் நடத்தினர், காவல்துறையினர் மதுக்கடை திறக்கப்படாது என்று உறுதியளித்தை அடுத்து பேராட்டத்தை பொது மக்கள் வாபஸ் பெற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் 2 மதுக்கடைகள் செயல்பட்டு வந்துள்ளது. அந்த மதுக்கடையினால் ஏராளமான தொந்தரவுகளை அனுபவித்து வந்த பொது மக்கள், மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின் போது அடித்து உடைத்தனர். இதையடுத்து அங்கிருந்த மதுக்கடைகள் அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியானதை அடுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.
இதைத்தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள், மதுக்கடை அமைப்பதற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் போராட்டத்தின் இடையே ஒருவர் மதுக்கடைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அப்போது ஆவேசமடைந்த இந்திராணி என்ற பெண் அந்த நபரை செருப்பைக் கொண்டு தாக்க முற்பட்டார். இதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் மதுக்கடை திறக்கப்படாது என்று உறுதியளித்தை அடுத்து பேராட்டத்தை பொது மக்கள் வாபஸ் பெற்றனர்.