ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் – மு.க.ஸ்டாலின்
ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
”காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளின்படி 40.43 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு ஆணையிடுவதோடு – தமிழகத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கும் முடிவையும் பாஜக அரசு கைவிட வேண்டும்”https://t.co/3goyNvCnpt
– கழக தலைவர் @mkstalin அறிக்கை.#DMK4TN pic.twitter.com/tiiYft14KG— DMK (@arivalayam) June 27, 2019
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் . தமிழ்நாட்டில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம், மத்திய அரசிடம் அனுமதி கோரியிருப்பது கண்டனத்திற்குரியது ஆகும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் இரு உத்தரவுகளின் படி 40.43 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.