இறந்த மகனின் நினைவாக 6 அடி உயரத்தில் தத்ரூபமாக மெழுகுசிலை செய்த தந்தை.
மதுரையில் உள்ள அவனியாபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் -சரஸ்வதி தம்பதியினருக்கு சுதா, கீதா என்ற 2 மகள்களும் மாரிகணேஷ் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் மாரி கணே ஷுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் இளம் வயது முதலே புல்லட் பைக் ரேஸர் ஆக இருந்து வந்துள்ளார். அதில் பல பதக்கங்களும் விருதுகளும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி, மாரி கணேஷ் உடல் நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சில நாட்களுக்கு பின் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, மாரி கணேசின் முதலாம் நினைவு தினத்தில், அவரது தந்தை முருகேசன் சுமார் 6 லட்சம் செலவில், மாரிகணேஷ் போலவே தத்ரூபமான மெழுகு சிலை ஒன்றை செய்து, அவனியாபுரத்தில் உள்ள சம்பூரணி சாலையில் உள்ள, தனது தனியார் திருமண மண்டபத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழிபாட்டிற்காக வைத்துள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…