7,000 கிலோ வெண்டைக்காயை மக்களுக்கு இலவசமாக வழங்கிய விவசாயி…!

7,000 கிலோ வெண்டைக்காயை மக்களுக்கு இலவசமாக வழங்கிய விவசாயி.
கள்ளக்குறிச்சியில் அதிக விளைச்சல் மற்றும் உரிய விலை கிடைக்காததால், விவசாயி ஒருவர் விளைவித்த 7,000 கிலோ வெண்டைக்காயை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிப்பாளையம், சின்னக்குப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஊரடங்கு காரணமாக விளைவித்த பொருட்களை, வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்ல முடியாமல், விவசாயிகள் தவித்து வந்தனர்.
வெளிமாநிலத்திற்கு எடுத்து சென்று விற்பனை செய்யும் போக்குவரத்து செலவை கூட ஈடு செய்ய இயலாததால், வண்டிப்பாளையத்தை சேர்ந்த அழகு இளங்கோ என்ற விவசாயி தனது நிலத்தில் விளைந்த 7,000 கிலோ வெண்டைக்காயை, உளுந்தூர்பேட்டை நகரப்பகுதியில் மக்களுக்கு இலவசமாக வழங்கினார்.