சோகத்தில் பண்ணை உரிமையாளர்கள் – தொடர்ந்து சரியும் முட்டை விலை

நாமக்கல்லில் உற்பத்தியில் செய்யும் முட்டைகளில் சுமார் 40% கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு காரணமாக முட்டை, கோழி, தீவன மூலப்பொருட்கள் போன்றவை கேரளா கொண்டு செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய் காரணமாக முட்டை விலை கடந்த 2 நாட்களில் 58 காசுகள் குறைந்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பண்ணை உற்பத்தியாளர்கள் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு கோழிகள் தீவனம் இன்றி இறக்கும் நிலை உருவாகியுள்ளதாக சோகத்துடன் கூறியுள்ளனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் இறைச்சி முட்டை சாப்பிட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!
March 19, 2025
“நான் பாத்துக்குறேன் பங்கு”..மும்பை கேப்டனாகும் சூரியகுமார் யாதவ்! பாண்டியாவுக்கு BCCI செக்?
March 19, 2025