தென்கிழக்கு வங்கக்கடலில் உருவானது ஃபானி புயல்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால், டெல்டா மாவட்டங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.ஆனால் அதேபோல் தற்போது ஃபானி என்ற புயல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை ஃபானி புயலாக மாறி, நாளை தீவிர புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக ஏப்ரல் 30 மற்றும் மே 1-ஆம் தேதிகளில் வட தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதேபோல் 1,150 கிமீ தூரத்தில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் தற்போது 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால் இன்று மாலை ஃபானி புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் உருவானது ஃபானி புயல்.வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது.சென்னைக்கு அருகே உள்ள ஃபானி புயல் நாளை அதிதீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார் .
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…