விடைபெற்ற வடசென்னை அடையாளம்.! 4 தலைமுறைகளை கடந்த அகஸ்தியா தியேட்டரின் கடைசி நாள்.!
4 தலைமுறைகளை கடந்த வடசென்னையில் பிரபலமான அகஸ்தியர் திரையரங்கம் இன்று இடிக்கப்பட்டது.
வடசென்னை மக்களின் நீண்ட கால நினைவுகளில் ஒன்று அப்பகுதியில் அமைந்த அகஸ்தியா தியேட்டர். இந்த தியேட்டர் கடந்த 1967ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. அப்போது பெரிய நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர் சிவாஜி படங்கள் திரையிடப்பட்டன.
இதுதான் வடசென்னையின் முதல் 70mm திரை கொண்ட தியேட்டர் என்பது கூடுதல் சிறப்பு. அதன் பிறகு ரஜினி கமல், விஜய் அஜித் என கடந்து தற்காலத்து சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி படங்கள் வரை இதில் திரையிடப்பட்டன.
தற்போது அதிக ஆண்டுகள் ஆனது உள்ளிட்ட காரணத்தால் தற்போது வடசென்னை அடையாளங்களில் ஒன்றான அகஸ்தியர் தியேட்டர் ஜேசிபி மூலம் இடிக்கப்பட்டுள்ளது.