மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு, நிர்வாகக்குழு கூட்டம் தொடங்கியது

மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு, நிர்வாகக்குழு கூட்டம் கமல்ஹாசன் தலைமையில் தொடங்கியுள்ளது.
கமல்ஹாசன் 2018 ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என கமல்ஹாசன் அறிவித்தார்.பின் இடைத்தேர்தலிலும் போட்டியிடும் என்றும் அறிவித்தார் .மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “டார்ச் லைட்” சின்னமாக ஒதுக்கப்பட்டது.ஆனால் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டு தோல்வி அடைந்தது.இதனிடையே தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு, நிர்வாகக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. வருகின்ற தர்தலில் தனித்து போட்டியா? கூட்டணியா? என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.